Aananthame paramananthame

ஆனந்தமே பரமானந்தமே Aananthame paramananthame

ஆனந்தமே பரமானந்தமே இயேசு
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே

1.இந்த புவி ஒரு சொந்தமல்லவென்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டுத் துன்பமும்
இயேசுவின் தொண்டர்க்கு
இங்கே பங்காய்க் கிடைத்திடினும்

2.கர்த்தாவே நீரெந்தன் காரூண்யக் கோட்டையே
காரணமின்றி கலங்கேனே யான்
விசுவாசப் பேழையில் மேலோகம் வந்திட 
மேவியே சுக்கான் பிடித்திடுமே

3.என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெயகீதம் பாடி நாம் மகிழ்ந்திடலாம்

4.கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ
கைவேலையில்லாத வீடொன்றை மேலே தான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ

5.துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எம்மை அண்டி வந்திடினும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையைத் 
துன்பத்தினூடே அனுப்பிடுவார்

6.இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமென்
ஏழை வெகுவாய்க் கலங்குகின்றேன்
என் நேசர் தன் முக ஜோதியதேயல்லால்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes