ஆத்துமமே என் முழு உள்ளமே {Aaththumamae en mulu ullamae
ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரை தொழுதேத்து - இந்நாள் வரை
அன்பு வைத்தாதரித்தே - உன்
ஆண்டவரை தொழுதேத்து
1.போற்றிடும் வானோர் - பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்து
2.தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத - ஆத்து
3.தினம் தினம் உலகில் நீ செய்பவலான
வினை பொறுத்தருளும் மேலான - ஆத்து
4.வாதை , நோய் துன்பம் மாற்றி ஆனந்த
ஓதரும் தயை செய்துயிர் தந்த வ்
5.உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - ஆத்து
6.துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே
இதயமே , உள்ளமே , என் மனமே - ஆத்து
Post a Comment