Alleluyah alleluyah

அல்லேலூயாஅல்லேலூயா {Alleluyah alleluyah 

அல்லேலூயா அல்லேலூயா
என் ஆத்துமாவே கர்த்தரை துதி

1.நான் உயிரோடு இருக்கும் மட்டும்
என் தேவனைத் துதிப்பேனே
நான் உள்ளளவும் என் இயேசுவையே
கீர்த்தனம் பண்ணிடுவேன்  -  அல்லே

2.நான் மனிதனை என்றும் நம்பிடேன்
அவன் யோசனை அழிந்திடுமே
யாக்கோபின் தேவன் என் துணையே
என்றென்றும் பாக்கியவான்  -  அல்லே

3.என் ஆத்தும தாகம் பெருக
என் கட்டுகள் அறுந்திடுமே
கர்த்தரின் கரம் என்னை காத்திடுமே
என்றென்றும் வாழ்த்திடுவேன்   -  அல்லே

4.கர்த்தர் சதாகாலமும்
சீயோனில் அரசாளுவார்
தலைமுறை தலைமுறையாம் அவரே
இராஜரீகம் பண்ணிடுவார்  -  அல்லே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes