Nigarae illatha sarvaesura

நிகரே இல்லாத சர்வேசுரா {Nigarae illatha sarvaesura}

நிகரே இல்லாத சர்வேசுரா
திகழும் ஒளி பிரகாசா
துதிபாடிட இயேசுநாதா
பதினாயிரம் நாவுகள் போதா

1.துங்கன் இயேசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனை தரிசிக்கவே
துதிகலுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம்

2.கல்லும் மணலும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் எம் தெய்வமல்ல
ஆவியோடும் உன்மையோடும் 
ஆதி  தேவனை வணங்கிடுவோம்

3.பொன் , பொருள்களெல்லாம் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே - நிகரே

4.தேவ மைந்தனாய் அவதரித்தார்
பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார் - நிகரே

5.கொந்தளிக்கும் அலைகளையும்
கால் மிதித்திடும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதட்டிடவே
அக்க்கரை நாமும் சேர்ந்திடவே - நிகரே

6.ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மா சந்தோஷ நாள் நெருங்கிடுதே - நிகரே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes