sthothiram thuthi paathiraa

Songs Um paatham paninthaen , Nigarae illatha sarvaesura,Enniladanga sthothiram

ஸ்தோத்திரம் துதி பாத்திரா {sthothiram thuthi paathiraa

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் என்னையும் உமக்காக
கொடுத்தீர் உம்மையும் எனக்காக

1.வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் என்னை மீட்டீரே

2.நம்பினோரை காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவி யாவையும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்திரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே

3.கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரை கண்பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர்தானே
எந்நளும் எங்கல் துணை நீரே

4.தீயோன் அம்புகள் தாக்காதே  எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணுகாதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes