என் இயேசுவைக் காண-En yesuvai kaana
என் இயேசுவைக் காண என் உள்ளம்
எப்போதுமே என்னுள் வாஞ்சிக்குதே
எப்போ அவர் முகம் கண்டு நான்
எந்நாளும் அவரில் ஜீவிப்பேனோ
1.தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
விண்ணவ ராஜன் இவர்
2.இந்திர நீல இரத்தினங்கள்
இழைத்த தங்கம் போல் அவர் அங்கம்
படிகப் பச்சை பதித்து விட்ட
பொன் வளையல்கள் , அவர் கரங்கள்
3.சுகந்தவர்க்க பாத்தி கன்னங்கள்
லீலி புஷ்பம் போன்ற உதடுகள்
தண்ணீர் நிறைந்த நதி ஓரமாய்
தங்கும் புறாவின் கண்கள்
Post a Comment