எண்ணி எண்ணி துதி செய்வாய் {Enni enni thuthi seivaai
எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணிலடங்கா கிருபைகட்காய்
என்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
1.உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னே பதறாதே
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைப்பாரே - எண்
2.யோர்தான் புரண்டு வரும் போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில் - எண்
3.உனக்கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசருக்கு நீதியவர் - எண்
4.திறந்த வாசல் முன்னே
தீவிரம் பிரவேசிப்போம்
ஒரு மனிதனும் பூட்ட மாட்டான்
ஜீவன் தந்தவர் கேட்கிறாரே - எண்
Post a Comment