கண்ணோக்கிப் பார்த்த தேவா (Kannokki paartha theva
கண்ணோக்கி பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவ சேற்றில் வாழ்ந்த என்னை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா
தாயே என் இயேசு நாதா
தந்தையே மாயெகோவா - 2
1.கர்ப்பத்தில் நான் தோன்று முன்னே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
கருவிலே நான் தோன்று முன்னே
உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர்
2.இரத்தத்தாலே மீட்டவரே
இரட்சிப்பு தந்தவரே
பாவமெல்லாம் தீர்த்தவரே
பரலோகில் சேர்ப்பவரே
3.கண்மணி போல் காத்தவரே
கண்ணீரை துடைத்தவரே
எண்ணமெல்லாம் நிறைந்தவரே
இதயத்தை கவர்ந்தவரே
Post a Comment