Kodi kodi sthothirame

கோடி கோடி ஸ்தோத்திரமே (Kodi kodi sthothirame

கோடி கோடி ஸ்தோத்திரமே
கோடா கோடி என் இயேசுவுக்கே

1.ஆயிரம் பேரிலும் சிறந்தவரே
ஆத்தும நேசர் என் இயேசு
அல்லும் பகலும் பாடிடுவேன்
ஆயுள் முழுவதும் உன் நாமமே

2.தாழ்வில் இருந்து தூக்கினீரே
தாவீதைப் போல பாடிடுவேன்
தாங்கி என்னை நடத்தினீரே
தற்பரனே துதி பாடிடுவேன்

3.பகலில் பறக்கும் அம்புகட்கும்
பாழும் கொள்ளைநோய்களுக்கும்
பறந்து காக்கும் பட்ஷி நீரே
பாடுவேன் துதி அல்லேலூயா

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes