நான் ஆராதிக்கும் தேவன் (Naan aarathikkum thevan
நான் ஆராதிக்கும் தேவன் இயேசுஎன்னை தப்புவிக்க வல்லவர்
அவர் ஜீவனுள்ளவர்
நேற்றும் இன்றும் மாறாதவர்
அல்லேலூயா.... அல்லேலூயா
1.எரியும் சூளையே ஏழுமடங்கு எரிந்திடு
என் தேவன் தப்புவிக்க வல்லவர் (2)
சிங்க கெபியே என்னை பட்சிக்க வந்திடு
என் தேவன் தப்புவிக்க வல்லவர் (2)
2.யோர்தான் நதியே என் முன் வந்திடு
உன்னை பிளந்து நடத்த தேவன் வல்லவர்
எரிகோ கோட்டையை தடையாய் நின்றிடு
உன்னை இடித்து நொறுக்க தேவன் வல்லவர்
3.பொல்லா சாத்தானே என்னை எதிர்த்து நின்றிடு
உன்னை விரட்டி அடிக்க தேவன் வல்லவர்
வறுமை வியாதியே என்னை தாக்க வந்திடு
என்னை விடுவித்து காக்க தேவன் வல்லவர்
Post a Comment