Thevane naan umathandaiyil

தேவனே நான் உமதண்டையில்-Thevane naan umathandaiyil


தேவனே நான் உமதண்டையில் –
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மா வலிய கோரமாக வன் சிலுவை
மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்  பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன்,
வாக்கடங்கா நல்ல நாதா

2. பரத்திற்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா எந்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும் - தேவ

3.நித்திரையினின்று விழித்துக்
காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என்துயர் கல் நாட்டுவேனே
எந்தன் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes