தூயாதி தூயவரே {Thooyaathi thooyavarae
தூயாதி தூயவரே
உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும்
1.சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே - பாரில்
2.பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே - பாரில்
3.துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கைட பெலன் தாருமே - பாரில்
4.பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே - பாரில்
Post a Comment