Thuthippathe en thaguthiyallo

துதிப்பதே என் தகுதியல்லோ {Thuthippathe en thaguthiyallo

துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை

1.வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார்

2.வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார்

3.மனதில் நிறைந்த மகிழ்ச்சி  தந்தார்
பார்வை நிறைந்த  தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த  ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார்

4.ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார்

5.வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார்

6.சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார் 
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒளி நிறைந்த வழி திறந்தார்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes