உம்மைப் பாடுவேன் இயேசய்யா (Ummai paaduven yesaiyaa
உம்மைப் பாடுவேன் இயேசய்யா
என் ஜீவன் உள்ளவரை
இந்த வாழ்வு உள்ளவரை
1.அனாதையாக நான் அலைந்தேனைய்யா
அசுத்தமாக நான் வாழ்ந்தேனைய்யா
என்னை அழைத்துக் கொண்டவரே
பரிசுத்தம் தந்தவரே
மகிழ்ந்து பாடுவேன் புது கானத்தில் - 2
2.தாங்கி நடத்துவீர் தடுமாறிட மாட்டேன்
தயவாய் நடத்துவீர் நான்
கீழ்ப்படிந்திருந்தேன்
என்னை சுமக்கும் தெய்வமே
உம் பாதம் பணிகிறேன்
புகழ்ந்து பாடுவேன் புது ராகத்தில்
3.சர்வ வல்லவரே உம்மை சார்ந்து
கொள்கிறேன்
சாந்தமுள்ளவரே
உம் மார்பில்
சாய்ந்து கொள்கிறேன்
புது வாழ்வு தந்தவரே
உம்மை வணங்கி நிற்கின்றேன்
வாழ்த்திப் பாடுவேன் புது கீதத்தில்
Post a Comment