வாழ்த்திப் பாடுவேன் (Vaalththi paaduven
வாழ்த்திப் பாடுவேன் என்னை
வாழ வைத்ததால்
போற்றிப் பாடுவேன்
புதுவாழ்வு தந்ததால்
வாழ்த்துவேன் வணங்குவேன்
போற்றுவேன்
உம்மிலே மகிழுவேன்
1.தள்ளப்பட்ட கல் நானைய்யா - என்னை
எடுத்து நீரும் நிறுத்தினீரையா
அனாதையாய் அலைந்தேனையா - என்னை
அன்போடு அணைத்தீரையா
2.பாசம் என் மேல் வைத்தினால் - என்னை
தேடி நீரும் வந்தீரையா
கலங்காதே என்றீரையா - என்
கண்ணீரை துடைத்தீரையா
3.உங்க உள்ளங்கையில் வரைந்தீரைய்யா - என்னை
இரவு பகலாய் காத்தீரையா
தடைகளெல்லாம் தகர்த்தீரையா பெற்ற
தாயைப் போல் தங்கினீரையா
Post a Comment