Vaarum vaarum magathuva thevane

வாரும் வாரும் மகத்துவ தேவனே (Vaarum vaarum magathuva thevane


வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்

1. மகிமைச் சொருபனே மாவல்ல தேவனே
மன்னா வந்தாசீர்வாதம் தாருமே

2. தாய் தந்தை நீர் தானே
தற்பரா எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையே

3. பாவத்தை வெறுத்துப் பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே நீர் வாருமே

4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே நீர் வாருமே

5. காருண்ய தேவனே கதியுமை அண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும்

6. மன்னா நின் வரவை எண்ணியாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனே

7.விழிப்புள்ள ஜீவியம் விமலா நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமே

8.இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
ஈந்ததாலுமுமக் கென்றும்
ஸ்தோத்திரம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes