இயேசு மகாராஜன் என்னோடு {Yesu magarajan ennodu
இயேசு மகாராஜன் என்னோடு 
இருக்கின்றார் பயமேது
இயேசு மகாராஜன்  நம்மோடு 
இருக்கின்றார் பயமேது
நான் (ம்)
பாடுவேன் அல்லேலூயா
நான் (ம்)
ஆடுவேன் அல்லேலூயா
1.உண்ணும் போதும் பார்க்கின்றார்
உறங்கும் போதும் காக்கின்றார்
கழுகு போல சுமக்கின்றார்
காலமெல்லாம் நடத்துகின்றார்
2.கண்ணீரெல்லாம் துடைக்கின்றார்
கவலையெல்லாம் நீக்குகின்றார்
ஆவியினால் நிரப்புகின்றார்
ஆசிகளை பொழிகின்றார்
3.தாயைப்போல தேற்றுகின்றார்
தந்தைபோல போஷிக்கின்றார்
ஆசான்போலப் போதிக்கின்றார்
நேசராய் என்னை அணைக்கின்றார்  
Post a Comment