Yesu raajan vanthu vittaar

இயேசு ராஜன் வந்து விட்டார் (Yesu raajan vanthu vittaar


இயேசு ராஜன் வந்து விட்டார்
நாம் கூடும் இந்த இடத்திலே
ஓசன்னா ஓசன்னா (2)

1.இருளான உம் வாழ்வு தான்
இப்போ வெளிச்சமாக மாறுதே
இயேசுவின் பேரொளி நம் மேல் வீச
எழும்பி ஜொலித்திடுவோம் (2)

2.சாத்தானை ஜெயித்த இயேசுதான்
நம்மில் உலாவிக்கொண்டு இருக்கிறார்
நோய்களும் பேய்களும்
சாபங்களெல்லாம் பறந்து ஓடிடுதே

3.அந்தகார வல்லமை முறித்திட
ஆவியானவர் இறங்கி இருக்கிறார்
கரத்தரின் கரத்தால் கட்டுகளெல்லாம்
அறுக்கப்படுகிறதே

4.ஆவியின் வல்லமை நம்மிலே
இப்போ அளவில்லாமலே ஊற்றுகிறார்
அனலாய் நாமும் கொழுந்து விட்டெரிய
அக்கினி இறங்கிடுதே

5.ஆசீர்வதிக்கும் கரங்களே நம்
சிரசின் மேலே அமருதே
நன்மையும் கிருபையும் சுகமும்
பெலனும் பாய்ந்து வருகின்றதே

6.துதிகளின் நடுவில் வசிப்பவர்
இப்போ நமக்குள்ளே
வந்திருக்கிறார் ஒரு மனமாய்
நாம் ஆவியில் நிறைந்து
கர்த்தரை துதித்திடுவோம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes