இயேசு ராஜனின் திருவடிக்கு {Yesu raajanin thiruvadikku
இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம்
சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கு சரணம்
சரணம் சரணம்
1.பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜனே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணை யாவும் ஆனீரே
சரணம் சரணம் சரணம்
2.இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றி தேற்றி காப்பீரே
3.பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்துமா சரீரத்தை படைக்கின்றேன்
4.உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
Post a Comment