Aanathamaai naamae aarparippomae

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே {Aanathamaai naamae aarparippomae

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த 
அளவில்லாத கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே

1.கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எம்மைக் காத்தாரே
கவலைகல் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம் - ஆத்து

3.படகிலே படுத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி எம்மைக்
காத்தாரே அல்லேலூயா - ஆத்து

4.யோர்தானை கடந்தோம்
அவர் பெலத்தால்
எரிகோவைத் தகர்த்தோம்
அவர் துதியால்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
என்றென்றும் வாழுவோம் - ஆத்து

5.பரிசுத்த வான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம் 
விரைந்தவர் வந்திடுவார் - ஆத்து

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes