Aandavar padaitha vetriyin naalithu

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது (Aandavar padaitha vetriyin naalithu

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம் - 2

அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

1.எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் - 2
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் - 2
   தோல்வி இல்லை நமக்கு
   வெற்றி பவனி செல்வோம் - 2

2.எனது ஆற்றலும் எனது பாடலும்
எனது மீட்புமானார்
நீதிமான்களின் கூடாரத்தில் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும் - 2

3.தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல் ஆயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் - 2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes