நான் பாடும் கானங்களால் (Naan paadum kaanangalaal
நான் பாடும் கானங்களால்என் இயேசுவைப் புகழ்வேன்
எந்தன் ஜீவிய காலம் வரை
அவர் மாறாத சந்தோஷமே
1.பாவரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர்
2.இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார்
3.நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும்
Post a Comment