Ammaiyappan unthan anbe

அம்மையப்பன் உந்தன் அன்பே (Ammaiyappan unthan anbe


அம்மையப்பன் உந்தன்
அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உம்
உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை
இருப்பது நிரந்தரம்
நான் வாழ்ந்த பின்பும் உம்மில்
உயிர்ப்பதும் நிரந்தரம்
நிரந்தரம் [2] நீரே நிரந்தரம்

1.தாயின் அன்பு சேய்க்கு
இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு
நீரேநிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை
நீரே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது
நீரே நிரந்தரம்
நிரந்தரம் [2] நீரே நிரந்தரம்

2.செல்வங்கள் கொணரும் இன்பத்தில்
இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது
இல்லை நிரந்தரம்
நிறைவாழ்வு என்னும் நிஜமான
நீரே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீர் உம்மில்
இணைப்பாய் நிரந்தரம்
நிரந்தரம் [2] நீரே நிரந்தரம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes