அப்பா நீங்க செய்த நன்மை (Appa neenga seitha nanmai
அப்பா நீங்க செய்த நன்மைஅது கோடி கோடி உண்டு (2)
நினைத்துப் பார்க்கும் உள்ளம்
அது எனக்கு இல்லையே (வேண்டுமே)
1.பாவங்கள் செய்து மரித்தேன்
ஜீவனை தந்தீரே
பாவங்கள் இருந்த இடத்தில்
உம் கிருபை வைத்தீரே
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை தாரும் தேவனே
2.நன்மைகள் என்னிடம் இல்லை
ஆனால் நல்லதை செய்ய வைத்தீர்
நான் உம்மை நினைக்கவில்லை
ஆனால் நீர் என்னை நினைத்தீரே
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை தாரும் தேவனே
3.ஏழை என்னை நினைத்து ஆசீர்வதித்தீரே
கரம் பிடித்து அன்பாய் நடத்திச் சென்றீரே
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை தாரும் தேவனே
Post a Comment