Naangal aarathikkum engal thevan

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் (Naangal aarathikkum engal thevan

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்
அழித்திடுவார் அவர் அழித்திடுவார்

சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்
அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம்  - 2 நாங்கள்

1.எரிகிற அக்கினி சூளையிலும்
விடுதலை அக்கினியாய் வந்திடுவார்
சேதம் வராமல் காத்திடவே -2
தேவக்குமாரனாய் வெளிப்படுவார்
சர்வ வல்ல - 2 நாங்கள்

2.நிகரே இல்லா பட்டயம் அவர்
நீதியின் கரத்தினால் நடத்திடுவார்
உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே
உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்
சர்வ வல்ல - 2 நாங்கள்

3.மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்
மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்
துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே
தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே
சர்வ வல்ல - 2 நாங்கள்

4.சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்
எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்
இராஜாதி இராஜா வருகின்றாரே
மேகங்களுடனே வருகின்றாரே
சர்வ வல்ல - 2 நாங்கள்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes