Elshadaai enthan thunai neere

எல்ஷடாய் எந்தன் துணை நீரே {Elshadaai enthan thunai neere

எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே

1. காலைதோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்

2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்

3. யேகோவா ராஃபா எந்த நாளும்
எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யெகோவா நிசியே ஸ்தோத்திரம்

4. யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யெகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes