Monday, 16 July 2018

Ennaalume thuthippai

எந்நாளுமே துதிப்பாய் {Ennaalume thuthippai

எந்நாளுமே துதிப்பாய்
என்னாத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் !
இந்நாள் வரையில் உன்னதனானவர் செய்த 
எண்ணில்லாத நன்மைகள் யாவும் மறவாது - எந

1.பாவங்கள் எத்தனையோ
நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மா தயவை எண்ணி

2.எத்தனையோ கிருபை 
உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
செத்திடாதபடி ஜீவனை மீட்டதால்

3.நன்மையாலுன் வாயை
நிறைத்தாரே பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன் வயது கழுகைப் போல் பலங்கொண்டு
இன்னும் இளமை போலாகவே செய்ததால்

4.பூமிக்கும் வானத்துக்கும்
உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்தியமேயிது 

5.மன்னிப்பு மாட்சிமையாம்
மா தேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ
கிழக்கும் மேற்க்கும் தூரமே
மண்ணில் உன் பாவம் அகன்றத் தூரமே
6.தந்தை தன் பிள்ளைகட்கு
தயவோடிறங்கானோ
தந்தை தன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே

No comments:

Post a Comment