எண்ணங்களெல்லாம் ஈடேறும் (Ennangalellam eederum
எண்ணங்களெல்லாம் ஈடேறும்
இயேசு உனக்குள் இருப்பதால் - நீ
சொல்வது எல்லாம் நடந்து விடும் - நீ
இயேசு கூட நடப்பதால்
1.மலையைப் பார்த்து பேசிடுவோம்
அதுவும் பெயர்ந்து கடலில் விழும்
புயலைப் பார்த்து அதட்டிடுவோம்
அதுவும் அடங்கிப் போய் விடும்
சாத்தான் கூட்டத்தை விரட்டுவோம்
சத்திய வேதத்தை உயர்த்துவோம் - எண்ணங்
2.இயேசு நாமத்தில் ஜெபிக்கும் போது
ஜெபத்தை தேவன் கேட்டிடுவார்
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மிகவும் அதிகமாய் செய்திடுவார்
சோர்வு இல்லாமல் ஜெபிப்போம்
வாக்குத்தத்தம் சுதந்தரிப்போம்
தடைகள் யாவும் முறிப்போம்
சதா இயேசுவை உயர்த்துவோம்
3.தேவனை பார்த்து துதித்திடுவோம்
துதிகள் மத்தியில் வந்திடுவார்
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
சதாகாலமும் ஆண்டிடுவார்
துதிக்கும் கர்த்தரின் பாட்டு
எதிரி சேனைக்கு வேட்டு
சர்வ ஆயுதத்தை மாட்டு
சாத்தானை ஊரை விட்டு ஓட்டு
Post a Comment