Kartharai thedina naatkalellam

கர்த்தரை தேடின நாட்களெல்லாம் {Kartharai thedina naatkalellam

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
காரியம் வாய்க்கச் செய்தாரே
எத்தனை எத்தனை நன்மைகளோ
இயேசப்பா செய்தாரே
இறுதிவரை என் வாழ்வு  -  2
இயேசப்பா உமக்குத்தானே

1.கால்கள் தள்ளாட விடமாட்டார் 
காக்கும் தேவன் உறங்கமாட்டார்
இஸ்ரவேலை காக்கிறவர் 
எந்நாளும் தூங்கமாட்டார்

2.கர்த்தர் என்னை காக்கின்றார் 
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினிலும் இரவினிலும்
பாதுகாக்கின்றார்

3.போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும் 
எந்நாளும் காத்திடுவார்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes