நன்றியால் பாடிடுவோம் {Nandriyaaal paadiduvom
நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே
1.செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய் ஆ ... நன்றி
2.உயிர்ப்பித்தே உயர்த்தினார்
உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க ஆ... நன்றி
3.ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மரித்தவர்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம் ஆ... நன்றி
4.மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்ருக்களாயினாரே
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம் ஆ... நன்றி
5.அழைக்கப் பட்டாரே நீர்
உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனியோர்க்களிப்பீர் ஆ... நன்றி
6.சீயோனை பணிந்துமே
கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் இராஜனையே ஆ... நன்றி
Post a Comment