Friday, 20 July 2018

Thuthi thangiya paramandala

துதி தங்கிய பரமண்டல (Thuthi thangiya paramandala

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுபமங்கள மிகு சம்பிரம சுக சோபன ஸேமம்!

1. அதி சுந்தர நிறை கொண்டுயர்
அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித
கருணைப் பிரதாபன்

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும்
வந்த மா பரிசுத்தனார்

3. திருவான் உல கரசாய் வளர்
தேவ சொரூபனார்
ஒரு மாதுடை வினை மாறிட
நரர் ரூபமதானார்

4. அபிராம் முனியிட மேவிய
பதிலாள் உபகாரன்
எபிரேயர்கள் குலம் தாவீ தென்
அரசற்கோர் குமாரன்

5. சாதாரண வேதாகம சாஸ்த்ர சுவிசேஷன்
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன்

6. விண்ணாடரும் மண்ணாடரும்
மேவுந் திருப்பாதன்
பண்ணோர் துவர் கண்ணாம் வளர் பரமண்டல நாதன்

No comments:

Post a Comment