Monday, 23 July 2018

Vaalnaalellaam kalikoornthu

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து ( Vaalnaalellaam kalikoornthu

வாழ்நாளெல்லாம் (காலைதோறும) களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்

நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்

1. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறை தோறும்

2. உலகமும் பூமியும் தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே

3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும்

4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்

5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்

No comments:

Post a Comment