Wednesday, 18 July 2018

Yehova thevanuku aayiram naamangal

யெகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் (Yehova thevanuku aayiram naamangal


யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்

யெகோவா ஷாலோம்
யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரப்பா

1. எல்லோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா -  யெகோவா

2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க  - 2 -யெகோவா

3. ஏலோகிமும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவீங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவீங்க - யெகோவா

No comments:

Post a Comment