Yesuraja munne selgiraaar

இயேசுராஜா முன்னே செல்கிறார் {Yesuraja munne selgiraaar


இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்

ஓசன்னா ஜெயமே
ஓசன்னா ஜெயம் நமக்கே

1.அல்லேலூயா துதி மகிமை என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்

2.துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே

3.யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes