Wednesday, 25 July 2018

Aarathanaiyil piriyam ullavare

ஆராதனையில் பிரியம் உள்ளவரே (Aarathanaiyil piriyam ullavare


ஆராதனையில் பிரியம் உள்ளவரே
உம்மை ஆராதனை செய்கிறோம் ஐயா (2)
துதியின் மத்தியில் வாசம் செய்பவரே
உம்மை துதித்து நாங்கள் மகிழ்கிறோம் ஐயா (2)

துதியும் கனமும் மகிமையும்
உமக்கே நாங்கள் தருகிறோம் (2)
துதிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் (2)

1.அஞ்சி அஞ்சி வாழும்
பாவ அடிமைகளாயிருந்தோம்  (2)
பாஸ்கா ஆடானீர்
பலியாகி எமை மீட்டிர் (2)

ஆராதனை செய்வோம்
உம்மை அன்பாய் கூப்பிடுவோம் (2)
ஆராதனை செய்வோம்
உம்மை அன்பாய் போற்றிடுவோம்

2.இரவிலும் பகலிலும் நீர்
அக்கினி மேக ஸ்தம்பமைய்யா (2)
எங்களை நடத்துகின்ற
ஞானக் கன்மலையும் நீரே (2) - ஆரா

3.பாலும் தேனும் ஓடும்
பரம கானான் செல்கின்றோம் (2)
எகிப்தமறந்து விட்டோம் - அதை
திரும்பியே பார்க்க மாட்டோம் (2) - ஆரா

No comments:

Post a Comment