Wednesday, 25 July 2018

Vaan velli pirakasikume

வான் வெள்ளி பிரகாசிக்குமே (Vaan velli pirakasikume


வான் வெள்ளி பிரகாசிக்குமே
உலகில் ஒளி வீசிடுமே
இயேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே (2)

1.பசும் புல்லனை மஞ்சத்திலே
தேவ பாலகன் துயில்கின்றார்
அவர் கண்மலர்வார் நம்மைக் கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார்

2.இகமீதினில் அன்புடனே
இன்ப செய்தியைக் கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம்

No comments:

Post a Comment