En nesar ennudaiyavar

என் நேசர் என்னுடையவர்-En nesar ennudaiyavar


என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும்
அவருடையவன்

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால்
என்னையும் கவர்ந்து கொண்டவரே

1.அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்தமிடுகிறார்

2.திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது

3.இயேசு முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்

4.விருந்து சாலைக்குள்ளே
என்னை அழைத்து செல்கிறார்
என் மேல் பறந்த கொடி நேசமே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes