Wednesday, 25 July 2018

Kartharai naan ekkaalamum

கர்த்தரை நான் எக்காலமும் (Kartharai naan ekkaalamum


கர்த்தரை நான் எக்காலமும்
வாழ்த்திடுவேன், வணங்கிடுவேன்
அவர்  துதி என்  நாவிலே
என்றென்றும்  பாடுவேன் அல்லேலூயா

1.யெகோவாவை நான் உள்ளவரை
உயர்த்தி கூறிடுவேன்
எளியவர் அதைக்கேட்டு
என்றென்றும் மகிழ்ந்திடுவார் அல்லேலூயா – 8

2.அல்லேலுயா நான் பாடிடுவேன்
அவரை ருசித்ததினால்
அனுதினம் அதிகாலையில்
அவர் பாதம் காத்திருப்பேன் அல்லேலூயா – 8

3.சிங்கக் குட்டிகளும் சோர்ந்திடுமே
பட்டினி கிடப்பதினால்
சேனையின் கர்த்தரையே சேவிப்போர்
சந்தோஷமடைவார் அல்லேலூயா 

No comments:

Post a Comment