Enniladanga sthothiram

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் | Enniladanga sthothiram

எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் - தேவா
என்றென்றும்  நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

1.வானாதி வானங்கள் யாவும் 
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே - எண்

2.காட்டினில் வாழ்கின்ற யாவும் 
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற  யாவும் 
நாதா உம்மைப் போற்றுமே - எண்

3.நீரினில் வாழ்கின்ற  யாவும் - இந்
நிலத்தின் ஜீவ ராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும் 
பரனே உம்மைப் போற்றுமே - எண்

4.வால வயதுள்ளானோரும் - மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும் 
பாடி உம்மைப் போற்றுவாரே - எண்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes