இயேசு ராஜா இதயத்தின் ரோஜா (Yesu raja ithayathin roja
இயேசு ராஜா இதயத்தின் ரோஜா
உம்மை நான் பாடிடுவேன்
ஓயாமல் துதித்திடுவேன் - 2
1.செய்த நன்மைகள் நினைக்கும் போது
கண்களில் கண்ணீர் வடிகிறதே (2)
செந்நீர் வடிந்த பாதம் பணிந்து
தொழுதிட உள்ளம் துடிக்கின்றதே
வல்ல பிதாவே உமக்கு ஆராதனை
வான் புறாவே உமக்கு ஆராதனை
2.எந்தன் பாவம் எந்தன் சாபம்
யாவையும் சிலுவையில் சுமந்திட்டீரே
உந்தன் காயம் என்னை சுகமாய்
ஆக்கிட வழியும் திறந்திட்டீரே
சுகமாக்கும் தெய்வமே ஆராதனை
வியாதி முற்றும்
விலக்கிடுவீர் ஆராதனை
3.எனக்குள் வந்து எனக்குள் வாழ்ந்து
என்னையும் உம்மைப் போல் மாற்றினீரே
இதயப் பலகையில் உந்தன் வசனம்
எழுதி என் உயிரில் கலந்திட்டீரே
வார்த்தையின் வடிவே ஆராதனை
வானம் பூமி படைத்தவரே ஆராதனை
4.பொங்கும் நதி நீர் புதிய ஆவியால்
எந்தன் உள்ளம் நிறைந்திட்டீரே
பாய்ந்து சென்று இயேசுவின் அன்பை
உலகெங்கும் சொல்லிட அருள் செய்தீரே
ஊற்றுண்ட தைலமே ஆராதனை
உதவிடும் கன்மலையே ஆராதனை
Post a Comment