Nenchinile nirainthavare

நெஞ்சினிலே நிறைந்தவரே(Nenchinile nirainthavare

நெஞ்சினிலே நிறைந்தவரே
நிம்மதியை தந்தவரே
நேசக்கரம் நீட்டி என்னை
பாசத்துடன் அணைப்பவரே
நன்றி ராஜா இயேசு ராஜா - 2

1.மாராவின் தண்ணீரை
மதுரமாய் மாற்றினீர்
மாறாத என் வாழ்வை
இனிமையாய் ஆக்கினீர்

உமக்கே நன்றியப்பா - இயேசப்பா 2

2.துன்பத்தின் பாதையில்
துணையாக வந்தீரே
துவண்டு வேளையில்
தோள் மீது சுமந்தீரே - உமக்கே

3.கண்ணீரின் வாழ்க்கையை
களிப்பாக மாற்றினீர்
பாலைவன வாழ்க்கையை
நீரூற்றாய் ஆக்கினீர் - உமக்கே

7 comments :

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes