மன மகிழ்ச்சி நல்ல மருந்துங்க (Mana magizhchi nalla marunthunga
மன மகிழ்ச்சி நல்ல மருந்துங்க - நம்ம
நல்ல டாக்டர் சொன்ன மருந்துங்க
எந்த மருந்திலும் தீராத நோய்கள்
இந்த மருந்திலே நிச்சயம் தீருங்க
1.மனமுறிவு பேய்கள் வர வழி திறக்குங்க
மனக்கவலை மனுஷ உடலை
வாட்டிப் போடுங்க
வாயார துதிகள் சொல்லுங்க - அதன்
வாசலையே மூடிப் போடுங்க
2.அகமகிழ்ச்சி உங்க முகத்தை
மலரச் செய்யுங்க
மனமகிழ்ச்சி எந்த நாளும்
விருந்து செய்யுங்க
ஆண்டவரின் மகிழ்ச்சி தானுங்க - உங்க
அனுதின வலிமை தானுங்க - மனமகிழ்
3.மனக்கசப்பு நோய்களுக்கு ஊட்டச்சத்துங்க
மனதில் பாரம் முறுமுறுப்பும் அதை வளர்க்குங்க
மனதார மன்னிச்சிடுங்க - உங்க
மாராவை மதுரமாக்குங்க - மனமகிழ்
4.பேரின்ப நதிகள் உள்ளே பாய்ந்து செல்லுதுங்க
பேராசை மகிழ்ச்சியோடு மொண்டு கொள்ளுங்க
நீதிமான் வீட்டுக்குள்ளேங்க - என்றும்
கெம்பீர சத்தம் உண்டுங்க - மனமகிழ்
Post a Comment