உந்தன் நாமம் உயர்த்தும் (Unthan naamam uyarthum
உந்தன் நாமம் உயர்த்தும்
எல்லா இடத்திலும்
நீங்க சீக்கிரமாய் வந்து அமருங்க
இயேசப்பா - 3 நீங்க சீக்கிரமாய்
வந்து அமருங்க
1.பயங்கரத்தாலே
வாழ்ந்திடுவோரை
அன்போடு அணைத்து தேற்றிடுங்க
உறவுகள் உடைந்து வாழ்ந்திடுவோரை
ஒன்றாக கூட்டி சேர்த்திடுங்க
இயேசப்பா - 3 நீங்க ஒன்றாக
2.கடன் தொல்லையால்
கதறிடுவோரை
கண் நோக்கி பார்த்து தேற்றிடுங்க
கடன் கொடுப்பாய்
கடன் வாங்க மாட்டாய்
என்ற வார்த்தையை நிறைவேற்றுங்க
இயேசப்பா - 3 உங்க வார்த்தையை
3.வியாதியினாலே வாடிடுவோரை
அன்போடு அணைத்து சுகமாக்குங்க
யேகோவா ராப்பா உம் தழும்புகளாலே
கரத்தை நீட்டி குணமாக்குங்க
இயேசப்பா - 3
நீங்க சீக்கிரமாய் குணமாக்குங்க
Post a Comment