En meetha iththanai anbu

என் மீதா இத்தனை அன்பு-En meetha iththanai anbu


என் மீதா இத்தனை அன்பு
இயேசு ராஜா
வானம் பூமியாவும் படைத்த
வல்ல ராஜா சர்வ வல்ல ராஜா
இயேசு ராஜா - 10

1.இத்தனை ஆண்டுகள்
எம்மை உம் தோள்களில்
தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம்
எங்கள் கண்களில் கண்ணீர் வடிகையில்
துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம்
தேடினால் காணப்படுகிறீர்
கூப்பிட்டால் பதில் தருகிறீர்

பேரின்பம் இது வன்றி வேறில்லை
சுக வாழ்வு இதைப்போல ஏதுமில்லை

2.புது புது கிருபைகள்
தினம் தினம் வாழ்வினில்
அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம்
உந்தன் வருகையில் எம்மை நினைத்திட
ஒப்படைத்து உம் பாதம் நிற்கிறோம்
தேவா நீர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்குவீர் - 2

பேரின்பம் இது வன்றி வேறில்லை
நிஜ வாழ்வு இதைப்போல ஏதுமில்லை - 2

3 comments :

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes