Ippothum eppothum

இப்போதும் எப்போதும் (Ippothum eppothum


இப்போதும் எப்போதும்
எல்லவற்றிற்காகவும்
தந்தையாம் கடவுளுக்கு
துதிபலி செலுத்திடுவோம்

துதிபலி சுகந்த வாசனை
நன்றிபலி அது உகந்த காணிக்கை

1.எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
தேவனின் கிருபையே பிரசன்னமானீரே (2)
துதிக்கின்றோம் தூயவரே
போற்றுகின்றோம் புண்ணியரே

2.தீய நாட்டங்கள் உலகு சார்ந்தவைகள்
வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே (2)

3.நெறிகேடு அனைத்தினின்றும்
மீட்பு தந்தீரையா
நற்செயல் செய்வதற்கு
ஆர்வம் தந்தீரையா (2)

4.தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு
இம்மையில் வாழ்வதற்கு
பயிற்சி தருகின்றீர் (2)

5.சொந்த மகனாக தூய்மை ஆக்கிடவே
உம்மையே பலியாக
ஒப்படைத்தீர் சிலுவையிலே (2)

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes