Umakku nigarnavar yaar

உமக்கு நிகரானவர் யார் (Umakku nigarnavar yaar


உமக்கு நிகரானவர் யார்
இயேசுவே இயேசுவே
உமக்கு நிகரானவர் யார்

1.விண் மண் உண்டாக்கின வித்தகனே
வார்த்தையால் தாங்கிடும் கோமகனே
பாவியை மீட்க பாரினில் வந்தவரே - 2
பார சிலுவையில் மரித்தவரே - உம

2.மரணத்தை மரணத்தால் வென்றவரே
சாத்தானை ஜெயித்து உயிர்த்தவரே
சாபத்தை நீக்க முள்முடி ஏற்றவரே - 2
வியாதிகள் யாவையும் தீர்த்தவரே - உம

3.தேற்றரவாளனாய் இருப்பவரே
ஆறுதல் தேறுதல் தருபவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
நீதியாய் அரசாள வருபவரே - உம

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes