Ullam ellam uruguthaiyaa

உள்ளம் எல்லாம் உருகுதையா (Ullam ellam uruguthaiyaa


உள்ளம் எல்லாம் உருகுதையா
உந்தன் அன்பை நினைக்கையிலே
தன்னாலே கண்ணு கலங்குது கர்த்தாவே உம்மை நினைக்குது
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே
என்னை நல்லவனாக்கி
அல்லையில் வைத்துக் கொண்டீரே

1.கருவில் அனாதையானேன்
தெருவினில் நான் கிடந்தேன்
அருகினில் வந்து என்னை
அணைத்த அன்பு தெய்வமே
உந்தனின் அன்பை நான்
என்ன வென்று சொல்வேன்
அற்புதமே அதிசயமே உம்மை நான்
என்றும் துதிப்பேன் - இந்த தெள்ளு

2.தேற்றிட ஒருவருமில்லை
ஆற்றிட யாருமில்லை
தூற்றிட பலருண்டு சேற்றை வீசும்
மனிதருண்டு
ஏற்றிடும் என் விளக்கை
தேற்றும் எந்தன் தெய்வமே
பொற்பரனே ! சற்பரனே !
உம்மை நான் என்றும் துதிப்பேன்

3.ஊரெல்லாம் சென்றிடுவேன்
உந்தன் நாமம் பறைசாற்றிடுவேன்
தெருவெல்லாம் இயேசுவே
என்று உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆளுகை செய்யும் இயேசுவே
உம்மையன்றி இவ்வுலகில்
ஆறுதல் எனக்கு யாருமில்லை

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes