எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் {Eththanai nanmaigal enakku seitheer
எத்தனை நன்மைகள் எனக்குச்
செய்தீர் நல்லவரே
எப்படிப்பா உமக்கு நான் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி கோடி நன்றி - எத்தனை
1.தடுமாறிப் போன நிலையில் தாங்கினீரையா
தகப்பனைப் போல பரிவு
காட்டி தூக்கினீரைய்யா - எத்தனை
2.ஆதி அன்பு எனக்குள்ளே
குறைந்து போனதே
ஆனாலும் எண்ணாது நன்மை செய்தீரே
3.மங்கி மங்கி எரிந்த போதும்
அணைக்காதிருந்தீர்
நெரிந்துபோன நாணல் வழ்வை
முறிக்காதிருந்தீர்
4. உம் சத்தம் கேட்டு சித்தம் செய்ய
மறந்தேனைய்யா
ஆனாலும் சகித்துக் கொண்டு நடத்தினீரையா
5.வலது பக்கம் இடது பக்கம்
சாயும் போதெல்லாம்
உம் வார்த்தையாலே வழுவாது காத்துக்
கொண்டீரே
6.உயிரோடு இருக்கும் வரை
உம்மைப் பாடுவேன்
உம் அதிசயங்களைப் [நான்] எடுத்துச்
சொல்லுவேன்
Post a Comment