Karangal thatti kartharai paadungal


கரங்கள் தட்டி கர்த்தரை பாடுங்கள் {Karangal thatti kartharai paadungal

கரங்கள் தட்டி கர்த்தரை பாடுங்கள்
ஆண்டவரைப் பாடுங்கள்
ஆனந்தமாய் பாடுங்கள்

1.வானம் பூமி உண்டாக்கின
அவரைப் பாடுங்கள்
நம்மை வானலோகம் சேர்ப்பவரை
வாழ்த்திப் பாடுங்கள்

2.செங்கடலைப் பிரித்தவரை
சேர்ந்து பாடுங்கள்
தினம் செம்மையான இதயத்தோடு
அவரைப் பாடுங்கள்

3.எரிகோ மதில் உடைத்தவரை
எழுந்து பாடுங்கள்
எண்ணில்லாத நன்மை செய்த
அவரைப் பாடுங்கள்

4.தாயைப் போல காப்பவரை
துதித்துப் பாடுங்கள்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
தினமும் பாடுங்கள்

5.மரித்தெழுந்த மகிபனையே
மகிழ்ந்து பாடுங்கள்
நமக்காகப் பரிந்து பேசும்
பரனைப் பாடுங்கள்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes