Karthar nallavar rusithu paarungal

கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள் (Karthar nallavar rusithu paarungal


கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர்

1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான்
அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய்

2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான்
அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
அவர் மகிமையில் தங்கிடுவாய்

3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
பாரில் இயேசுவை பாடி போற்றுவான்
அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
அவர் ஆறுதல் பெற்றிடுவாய்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes